Editorial / 2026 மார்ச் 31 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி.கபில
ரஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), இலங்கைக்கு ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (31) அன்று பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவரும் இந்தத் தூதுக்குழுவில் வருகை தந்துள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-281 என்ற விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை (31) அன்று மாலை 4:20 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையில் வைத்து அவர்களை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித் ருவான் கொடிதுவக்கு. இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் ஜகாரியன் வரவேற்றனர்.
இந்த ஐந்து நாள் விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து உயர்மட்டக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago