2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை

dd

17 வயது இளைஞன் மர்ம மரணம்

Mayu   / 2026 மே 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சனிக்கிழமை (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த இவர், கடந்த சில நாட்களாக அவரது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த இளைஞன் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணத்திற்கான காரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துத் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .