2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ராஜஸ்தானின் வன்முறை: இணைய சேவை முடக்கம்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

உதய்பூரில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரை சக மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்கப்பட்ட மாணவனும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமூக பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான்கு கார்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பல வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டுள்ளன. பதற்றம் காரணமாக உதய்ப்பூரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .