Freelancer / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுநரும் தலைவருமான மருத்துவர் எஸ்.ராமதாஸுக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) திண்டிவனம் - தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க வேண்டியதன் அவசியம், ஏக்கிய இராச்சிய அரசமைப்பை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் ஆகிய விடயங்கள் பேசப்பட்டன.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., பொன்னுத்துரை ஐங்கரநேசன், செல்வராசா கஜேந்திரன், தருமலிங்கம் சுரேஷ், கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். (a)

43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago