2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

ரிசாட் - மஸ்தான் ஆதரவாளர்கள் மோதல்

Freelancer   / 2024 நவம்பர் 12 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.
 
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியின் பிரதான வீதிக்கு அருகாக நேற்று (11) இரவு 8 மணியளவில் காதர்மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. 
 
இதன்போது குறித்த பகுதிக்கு உந்துருளியில் பிரவேசித்த சிலர் பொதுக்கூட்டத்தைப் பார்த்துக் கூச்சலிட்டனர். 
 
சற்றுநேரத்தில் குறித்த உந்துருளிகளுக்குப் பின்னால், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத்தொடரணி கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தன. 
 
இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
 
இதன்போது ரிசாட் பதியூதீனின் வாகனத்தொடரணி தாக்கப்பட்டுள்ளது. (a)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .