Editorial / 2021 மே 03 , மு.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன், பாறுக் ஷிஹான்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரன் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்றையதினம் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன்படி, வவுனியா, புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்றுக்காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எனினும், கல்முனையில் நேற்று (02) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எம் அப்துல் ரஸாக் (ஜவாத்) ஏற்பாட்டில், கல்முனை மாநகர முன்றலில் இவ்வார்ப்பாட்டம் நடைபெறவிருந்தது.
பொதுமக்கள் பலர் இதன்போது ஒன்றுகூடிய போதிலும் மேற்படி தடை உத்தரவால் அங்கிருந்து மாவடிப்பள்ளி பகுதிக்கு திடிரென ஆர்ப்பாட்டம் மாற்றப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, அதிகளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர் என்பதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago