2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

“ரூ. 2000 படிப்படியாக சுற்றோட்டத்திற்கு விடப்படும்”

Janu   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2000 ரூபாய் நாணயத்தாளை 2025 ஓகஸ்ட்  29 அன்று  வெளியிட்டது. அந்த நாணயத்தாள்  சுற்றோட்டத்திற்கு விடப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன. இச்செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப. புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக சுற்றோட்டத்திற்கு விடப்படும்.

மாறுதலடைகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுவதுடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றிப் பயன்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .