Editorial / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர் கடந்த 16-ம் திகதி செந்துரை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அவரிடம் ஒரு இளம்பெண் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது அந்த இளம்பெண் தன்னை திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் என்று அறிமுகம் செய்துகொண்டார்.
மேலும் அந்த இளம்பெண் தன்னை திட்டக்குடி பார்டரில் கொண்டு சென்று விடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் அந்த இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் கூட்டி சென்றார். செந்துறை அருகே உள்ள அரசுக்கு சொந்தமான வங்காரம் காப்பு காட்டுப்பகுதியில் சென்றபோது என்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே குழுமூர் வரை கொண்டு விடுங்கள் என கூறினார்.
செல்லும் வழியில் முதியவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியும் ஆசையை தூண்டும் வகையில் ஆபாசமாக பேசி வலை விரித்துள்ளார். அவரது பேச்சில் சபலம் ஏற்பட்ட முதியவர் அந்த இளம்பெண்ணுடன் காட்டுக்குள் ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்றார். அங்கு வைத்து இருவரும் மது குடித்துள்ளனர். பின்னர் முதியவர் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த வேளையில் அந்த இளம்பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் அங்கு திடீரென வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து முதியவரை அடித்து உதைத்து அவர் அணிந்திருந்த 6 1/2 பவுன் நகையை பறித்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட முதியவர் நடந்த விவரம் குறித்து தளவாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில் அவர்கள் குறித்த துப்பு துலங்கியது. அந்த பெண் அரியலூர் மாவட்டம் ஆண்டி மடல் அருகே உள்ள சிலம்பூரை சேர்ந்த பாஞ்சாலை என்கிற கலையரசி (வயது 35) அவரது நண்பர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேல குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் (வயது 30 )என்றும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அவர்களை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. பின்னர் 2 பேரையும் பொலிஸார் செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கலையரசி திருச்சி மகளிர் சிறையிலும், நவீன்குமார் அரியலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago