Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 30 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் விசாரணை தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) அன்று தெரிவித்தார்.
ஹேபியஸ் கார்பஸ் விசாரணை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் ரொமேஷ் டி சில்வா இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்கு தெரிவித்தார்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது கட்சிக்காரர் யாழ்ப்பாணத்திற்குப் பதிலாக கொழும்பில் உள்ள ஒரு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.
மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நுவான் போபேஜ், இந்தக் கோரிக்கைக்கு தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன்படி, நீதியரசர் யசந்த கோடகொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, நான்கு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்டது.
லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான ஹேபியஸ் கார்பஸ் விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டும் என்ற நோட்டீசை இரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பினர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தனர்.
ஹேபியஸ் கார்பஸ் விசாரணையில் ஆஜராகி சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியபோது 2011 டிசெம்பர் 9, அன்று காணாமல் போனார்கள்.
31 Jul 2025
31 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jul 2025
31 Jul 2025