Freelancer / 2026 மார்ச் 18 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நாட்டிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.
அந்த வகையில், ஏப்ரல் மாத இறுதி வரை தேவையை பூர்த்தி செய்ய போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இந்த கையிருப்புகள் தற்போது மாலைதீவுகளில் உள்ள சேமிப்பு இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்காவில் இருந்து கூடுதலாக 33,000 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாளையும், மற்றுமொரு கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதியும் மாலைதீவுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் எரிவாயு தேவையை எந்த தடையும் இல்லாமல் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். R
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago