Janu / 2024 ஜூலை 11 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - அவிசாவளை லோ லெவல் வீதியின் ரணால, சுடவில பிரதேசத்தில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனால் வேவிலைச் சந்தி மற்றும் சியாம்பலா கஸ் சந்தியிலிருந்து கனரக வாகனங்கள் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .
மேலும் , அப்பகுதி மக்களும், பொலிஸாரும் இணைந்து கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
25 minute ago
38 minute ago
44 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago
44 minute ago
53 minute ago