Freelancer / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்யும் பணிகள் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்துப் பிரஜைகளும் தமது பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துமாறு 'சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம்' கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2027 ஜனவரி 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 வயது பூர்த்தியடையும் இளம் பிரஜைகள், தத்தமது பிரதேச கிராம அலுவலர் மூலம் YC படிவத்தைச் சமர்ப்பித்துத் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு பெஃப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த வருட வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத, ஆனால் தற்போது வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் ER படிவத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்குத் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.elections.gov.lk என்ற முகவரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. (a)
2 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
03 Feb 2026