2026 மே 09, சனிக்கிழமை

dd

வகுப்புகளை ஏற்பாடு செய்தவர் கைது

J.A. George   / 2021 மே 14 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஹ்ரான் ஹாசீமின் ஒத்துழைப்புடன் அடிப்படைவாதத்தைத் தூண்டும் வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் பகுதியில் வைத்து 38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு நேற்று(13) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டில் அடிப்படைவாதத்தைத் தூண்டும் வகுப்புகளை குறித்த சந்தேக நபர் ஏற்பாடு செய்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .