Simrith / 2023 ஜூலை 03 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கஸ்பாவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் மத்தியில் ராஜபக்சர்கள் தொடர்பில் நல்லதொரு மனப்பான்மை காணப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பொருளாதார ரீதியில் நன்னிலையிலிருந்த முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே மஹிந்த ராஜபக்ச நல்லாட்சி அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவது குறித்து அவதானம் செலுத்தாமல் ராஜபக்சேக்களை பழிவாங்குவதிலேயே அவதானம் செலுத்தியது.ராஜபக்சேக்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.ஆனால் அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
ராஜபக்சேக்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் பதுக்கி வைத்துள்ளார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அரசியல் பிரசாரத்துக்காகவே ராஜபக்ஷர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.2019ஆம் ஆண்டு பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிமாற்றம் மீண்டும் ஏற்பட்டது.ஒரு தரப்பினரது தவறான ஆலோனைகளினால் அரசாங்கம் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைந்தது.
பொருளாதார பாதிப்பு காரணமாக அரசியல் நெருக்கடி தோன்றியது.பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.அரசியல் ரீதியில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் கட்சி என்ற ரீதியில் சிறந்த முறையில் போட்டியிடுவோம்.தேர்தல் மூலம் ராஜபக்சேக்கள் தலைமையிலான அரசாங்கத்தை கூடிய விரைவில் மீண்டும் தோற்றுவிப்போம் என நாமல் தெரிவித்தார்.
8 minute ago
17 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
26 minute ago
32 minute ago