Editorial / 2025 நவம்பர் 13 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு செவ்வாய்க்கிழமை (11) அன்று நடைபெற்ற பிரதேச சபையின் பொதுக் கூட்டத்தில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்காததை எதிர்த்து வெங்காய மாலைகளை அணிந்து கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு தம்புள்ளை பிரதேச சபை வளாகத்திற்கு பேரணியாகச் சென்று, "விவசாயி மகன் ராஜாவாகிவிட்டான், விவசாயி கொல்லப்பட்டான்" போன்ற கோஷங்களை எழுப்பினர்.
நிகழ்வில் பேசிய தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேலும் கூறியதாவது:
விவசாயிகளின் சார்பாக அதிகம் குரல் கொடுக்கும் அமைச்சர்கள் லால் காந்த மற்றும் வசந்த சமரசிங்க தலைமையிலான அரசாங்கம், விவசாயியை ஏமாற்றி விட்டது. அடுத்த ஆண்டு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வாங்க ஒரு திட்டம் வகுக்கப்படுவதாக இப்போது அவர்கள் கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு சாப்பிட இந்த ஆண்டு சாப்பிட வேண்டும் என்பது இந்த அமைச்சர்களுக்குத் தெரியாதா? இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வாங்க ஒரு திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்
19 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago