2026 மே 08, வெள்ளிக்கிழமை

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு

Freelancer   / 2024 நவம்பர் 13 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளது.

அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதன்படி மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வடமாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .