Janu / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசேட தேவையுள்ள நபர்களுக்கான வசதிகளுடன் கூடிய வளிச்சீராக்கிகள் பொருத்தப்பட்ட தாழ்வான மிதிபலகையுடன் கூடிய 10 புதிய பேருந்துகளைச் சேவையில் அமர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
"கிளீன் ஸ்ரீலங்கா' கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி, முன்னோடிக் கருத்திட்டமாக விசேட தேவையுள்ள நபர்களுக்கான வசதிகளுடன் கூடிய வளிச்சீராக்கிகள் பொருத்தப்பட்ட தாழ்வான மிதிபலகையுடன் கூடிய பேருந்து சேவை முன்னோடிக் கருத்திட்டமாக அமுல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகை தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், 2026.03.15 ஆம் திகதியாகும் போது குறித்த பேருந்துகள் எமது நாட்டுக்குக் கிடைக்கப் பெறவுள்ளன.
குறித்த பேருந்து சேவைகள் மற்றும் பராமரிப்புக்குத் தேவையான பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இயலுமை இன்மை கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், பேருந்து போக்குவரத்து நவீனமயப்படுத்தலுக்கான ஆரம்பப் படிமுறையாக நவீன மற்றும் வசதிகளுடன் கூடிய, முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களுடன் கூடிய 100 பேருந்துகளைக் கொழும்பு நகர்ப்புறங்களில் பயணிகள் போக்குவரத்துக்கான கருத்திட்டத்தை அமுல்படுத்தப்படும்.
2025.07.21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள லங்கா மெட்ரோ ட்ரான்ஸ்போர்ட் (தனியார்) கம்பனிக்கு குறித்த 10 பேருந்துகளை ஒப்படைத்து, அவற்றின் நடவடிக்கைகளை இக்கம்பனியின் கீழ் மேற்கொள்வதற்காகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
49 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
4 hours ago
4 hours ago