2025 மே 09, வெள்ளிக்கிழமை

விசாரணை நடத்துமாறு ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Freelancer   / 2023 செப்டெம்பர் 30 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய T.சரவணராஜாவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். 

அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பில் பிரஸ்தாபிக்கவுள்ளதாக அவர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். 

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் நீதிபதிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நீதிபதிகளுக்கு எதிரான அச்சுறுத்தலானது நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான அச்சுறுத்தல் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  R
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X