Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி வீரர் வசீம் தாஜுதின் மரணம் தொடர்பில், தன்னை கைதுசெய்வதை தடுத்துநிறுத்துமாறு கோரி, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வசீம் தாஜுதினின் ஜனாஸாவில் இருந்து காணாமல் போன உடற்பாகங்கள் தொடர்பில், தான் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, தனக்கு முன்பிணை வழங்குமாறு கோரி மனுவொன்றை நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்திருந்தார்.
இந்தச் சம்பவத்துடன் தனக்கு எவ்விதமான தொடர்பும் இல்லையென்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த முன்பிணை மனுவைப் பரிசீலனைக்கு எடுத்த கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க, பிணை வழங்குவது, விசாரணைக்குப் பாதகமாக அமையும் என்று சுட்டிக்காட்டியதுடன், முன்பிணை மனுவையும் நிராகரித்தார்.
2 minute ago
14 minute ago
28 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
28 minute ago
28 minute ago