2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சொக்லேட் திருடியவர் கொடூர கொலை

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனையில் சொக்லேட் மீது மோகம் கொண்ட 67 வயது நபர் ஒருவர் கடையில் இருந்து ஒரு சிறிய சொக்லேடை திருடியதாகக் கூறி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளரும் அவரது ஊழியர்களில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர்,  பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், தனது பிள்ளைகள் திருமணம் செய்து கொண்டு வேறு பகுதிகளில் குடியேறிய பிறகு அவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிக்கப்படுகின்றது.

சம்பவத்தன்று குறித்த நபர் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு  கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர்.

ஏனெனில், அவர் முன்தினம் கடையில் சொக்லேட்டுகளை திருடும் காட்சி சி.சி.ரி.வி. கெமராவில் பதிவாகியிருந்துள்ளது.

முதியவரிடம் சொக்லேட் வாங்கும் அளவிற்கு பணம்  இல்லாமையால் சொக்லேட் பிரியரான அவர் திருடியுள்ளார். 

அவர் வழமையாக கடைக்குச் செல்லும் போது, தனக்கும் அவரது மனைவிக்கும் சொக்லேட்கள் வாங்கி வரும் பழக்கம்  இருந்துள்ளது.

சந்தேகநபர்கள் தாக்குதலுக்குள்ளான முதியவரை கடை மூடும் நேரம் வரை உள்ளே வைத்திருந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

அவ் வழியூடாக சென்ற பெண்ணொருவர் அவரை அடையாளம் கண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் என மரணப்படுக்கையில் இருந்த முதியவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜித விஜேகோனின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .