2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பா.ஜ.கவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை கஸ்தூரி நேற்று சென்னை தியாகராய நகரில் அலுவலகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  நடிகை கஸ்தூரியும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், நமிஸ் சவுத் குயின் இந்தியா நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் இன்று சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா முன்னிலையில், இணைந்தனர்.

சமூக செயல்பாட்டாளரான கஸ்தூரி மற்றும் நமீதா மாரிமுத்து இன்று முதல் அதிகாரபூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் பா.ஜ.கவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்  எனத் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .