2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதிய பொலிஸ்மா அதிபர் - ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

புதிய  பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு    ஜனாதிபதிக்கு அவர்  நினைவுப் பரிசொன்றையும்  வழங்கினார்.

சட்டத்தரணி  பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர் ஆவார். இலங்கை பொலிஸ் சேவையில்  கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய  மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .