Editorial / 2024 ஜூன் 11 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் தடுத்து
கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் சந்திம எதிரிமான்ன பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீடிக்க இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், சரத் ஏக்கநாயக்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்த, பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் தலைவர் நிமல் சிறிபாத சில்வா ஆகியோர் கட்சியின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதற்காக விதிக்கப்பட்ட தடையை நீடிக்குமாறு மேலதிக மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago