Freelancer / 2026 மே 08 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றும், காங்கிரஸின் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் அவர் ஆட்சி அமைக்க முடியாத சூழல் இருந்துவருகிறது.
இந்தச் சூழலில், திமுக, அதிமுக ஆகியவை தனித்தனியாக தங்களது எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களை நடத்தின. இந்த நிலையில், ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொலைபேசி வாயிலாக ஒரு முக்கியப் பேட்டி அளித்துள்ளார்.
அதில், “ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை அவசியம். அதன் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க உரிமை கோரி என்னை சந்திக்க வருவோரிடம் நான் கேட்பது ஒன்று தான்.
ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்கள் உங்களிடம் உள்ளனரா என்பது தான்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம்,
அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதி கொடுப்பீர்களா என எழுப்பிய கேள்விக்கு,
“அப்படி வரும் போது அவர்களுக்கான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பரிசீலனை செய்து முடிவெடுப்பேன். பதவிப்பிரமாணம் செய்து வைக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் சூழல் அப்படி இல்லை. இன்று எண்ணிக்கையை கொண்டுவந்தால் நாளையே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறேன்” எனவும், தவெக தலைவர் விஜயை நான் தடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைத்தால் தவெகவின் 108 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. R
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago