Editorial / 2026 மே 07 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் பெறப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, சொத்தின் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்தப் பொது அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
வீடுகள், கட்டிடங்கள் மற்றும் அவற்றின் வளாகங்களைக் குறுகிய காலம் அல்லது நீண்டகால அடிப்படையில் வாடகைக்கு அல்லது குத்தகைக்குப் பெறும் சில நபர்கள் அல்லது குழுக்கள், அவற்றைப் பயன்படுத்திப் பல்வேறு மோசடிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, வீடுகள் அல்லது கட்டிடங்களை வாடகைக்கு வழங்கும் போது, சொத்தின் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது மிகவும் அவசியமானதாகும்.
உள்நாட்டு அல்லது வெளிநாட்டிலுள்ள நபர்களுக்கும், சில குழுக்கள் அல்லது நிறுவனங்களுக்கும் சொத்துக்களை வாடகைக்கு வழங்குவது சாதாரண நடைமுறையாகும். எனினும், சில சந்தர்ப்பங்களில், சொத்தின் உரிமையாளர்கள் எவ்விதத்திலும் எதிர்பாராத வகையில், அந்த இடங்களைப் பயன்படுத்தி மோசடி மற்றும் குற்றச் செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சொத்தின் உரிமையாளர்கள் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதுடன், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக்கப்பட வேண்டிய துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76-ஆவது பிரிவின்படி அறிவுறுத்தல்: பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76-ஆவது பிரிவின்படி, எந்தவொரு வீட்டிலும் வசிக்கும் அனைத்து நபர்களின் தகவல்களையும் பெறுவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு. அதன்படி, குடும்பத் தலைவர் தனது குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் தொடர்பான தகவல்களைச் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு வழங்க வேண்டும்.
மேலும், வசிப்பவர்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதனை உடனடியாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு அறிவிப்பது குடும்பத் தலைவர் அல்லது வீட்டு உரிமையாளரின் கடமையாகும். அவ்வாறு அறிவிக்கத் தவறுவது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல், குறித்த வீட்டிலோ அல்லது கட்டிட வளாகத்திலோ ஏதேனும் குற்றச் செயல்கள் நடைபெறுவதை அறிந்தும் அதனை மறைத்து வைத்திருப்பது, அக்குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதற்குச் சமமாகக் கருதப்படும்.
ஆகவே, வீடுகள் அல்லது கட்டிடங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கும் போது, அவற்றைப் பெறும் நபர்களின் ஆள் அடையாளம், நோக்கம் மற்றும் தேவைகள் குறித்து உரிய கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவதன் மூலம், ஏற்படக்கூடிய மோசடி மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தப்படுகிறது.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago