2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கணக்கு பார்த்த கணவன் நீதிமன்றத்துக்கு போன மனைவி

Editorial   / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினசரி வீட்டுச் செலவுகளைக் கணக்கிடுவது, வருமானம், செலவுகளைப் பதிவு செய்வது. வீட்டுக்கணக்கு என்று கூறுவார்கள், இந்த வீட்டுக்கணக்கை சரியாக வைத்திருந்தால்​ பொருளாதார ரீதியில் முகங்கொடுக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

எனினும், வீட்டுக்கணக்கு பார்த்தார் என குற்றஞ்சாட்டி தனது கணவருக்கு எதிராக மனைவி நீதிமன்றத்துக்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

தெலங்கானாவைச் சேர்ந்த கணவன் தன்னுடைய பெற்றோருக்கும், சகோதரருக்கும் அனுப்பிய பணத்தையும், வீட்டுச்செலவுகளையும் Excelலில் போட்டு பராமரிக்கிறார்.

இது கொடூரம் மற்றும் வரதட்சணை சட்டம் IPC 498Aல் கீழ் பதிவு செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் வீட்டுக்கணக்கு பார்ப்பது கொடூரம் இல்லை என்றும் திருமணப் பிரச்சினைகளில் கிரிமினல் சட்டங்களை தவறாக பயன்படுத்துவதையும் நீதிமன்றம் எச்சரித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X