2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வட்டவளை ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

Nirosh   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆடைத் தொழிற்சாலையை நான்கு நாள்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆடைத் தொழிற்சாலையிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 பேருக்கு மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனைகளில், 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் 300இக்கும் அதிகமானோருக்கும், எதிர்வரும் நாள்களில்  ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X