Freelancer / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரை, மாகாண அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமித்ததன் ஊடாக அந்த மாகாணத்திற்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வியாழக்கிழமை (09) அன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த விசேட கூற்று மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
"மாவட்ட மட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நியமிக்க முடியும். அதற்கமைய, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு இணங்கவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் என்பது மாகாண ரீதியானது அல்ல, அவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எனத் தனித்தனியாகச் செயற்படுத்தப்படுபவை. இத்தகைய சூழலில், வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரை அபிவிருத்திக் குழுத் தலைவராக நியமித்ததன் மூலம் மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியாது.
மேலும், வடக்கு மாகாண மாவட்ட மட்டக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் புகார்கள் தொடர்பாக, முறையான சாட்சியங்களுடன் எந்தவொரு முறைப்பாடும் முன்வைக்கப்படவில்லை என மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எவ்விதப் பதிவுகளும் இல்லை." என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago