Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 21 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கார்த்திகை 27 சுடர் ஏற்றிவணக்கம் செலுத்த வருமாறு முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் நேற்று (20) முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது
எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நினைவிற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான தயார்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் கிராம மக்களால் சிரமதான முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவில் கொள்ள தயாராக உள்ளனர்.
இதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் உற்றோர்கள் அனைவரும் வருகை தந்து சுடரேற்றி மாவீரரை நினைவில் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
7 hours ago
7 hours ago
9 hours ago