2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

வீதி விபத்தில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ் 

மட்டக்களப்பு திருமலை நெடுஞ்சாலையில் பனிச்சங்கேணியில் வெள்ளிக்கிழமை(07) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவத்தில் காத்தான்குடியை சேர்ந்த 65 வயதுடைய செய்யது முஹம்மது நாகூர் பிச்சை என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சகோதரரான ஓட்டமாவடியைச் சேர்ந்த செய்யது முஹம்மது சுபையிர் ஹாஜியார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது - செய்யது முஹம்மது நாகூர் பிச்சை வெள்ளிக்கிழமை(07) அதிகாலை தனது சகோதரர் சகிதம்   மோட்டார் சைக்கிளில் திருகோணமலையை நோக்கி சென்றுள்ளார்.

அதிகாலை வேளை வாகன நெரிசல் இல்லாததன் காரணமாக அவர் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்றுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் பனிச்சங்கேணி பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் சிறு குழியில் வீழ்ந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


உயிரிழந்தவரின் ஜனாஸா வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் உடனடியாக வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X