2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

விமல் வீரவன்ச சத்தியாக்கிரகம்

Editorial   / 2026 ஜனவரி 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடன், கல்வி அமைச்சின் முன் தொடர்ச்சியான 'சத்தியாக்கிரக' போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்வித் துறையில் அரசாங்கம் முன்மொழியியுள்ள மாற்றங்களுக்கு பரவலான எதிர்ப்பை எடுத்துக்காட்டும் வகையில், தங்கள் கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை மறியல் போராட்டத்தைத் தொடர பங்கேற்பாளர்கள் உறுதியளித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .