2025 ஜூலை 28, திங்கட்கிழமை

வயோதிபர் சடலமாக மீட்பு

Freelancer   / 2025 ஜூலை 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு எரிந்த நிலையில் நேற்று  (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயோதிபர் வாழ்ந்த வீட்டில் இருந்து புகை வெளிவருவதை  வீதியால் சென்ற அவரது உறவினர் அவதானித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட குறித்த வயோதிபர் பாவித்த பீடியின் மூலம் அவர் உறங்கும் மெத்தையில் ஏற்பட்ட தீயின் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்க்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .