2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வியாழேந்திரனுக்கு எதிரான வழக்கு; நீதிமன்றத்தின் உத்தரவு

Nirosh   / 2022 ஜனவரி 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 07ஆம் திகதி வரையில் ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் தலை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த வியாழேந்திரன் உட்பட ஆறு பேருக்கு எதிராக  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X