Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரட்சியான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களை சேர்ந்த 5 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துள்ள மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, புத்தளம், திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதிகளை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதற்கு மேலதிகமான, குறித்த பிரதேசங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடிநீர் பௌசர்கள் மற்றும் குடிநீர் தாங்கிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
வரட்சி மற்றும் ஏனைய அனர்த்த நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து அது தொடர்பில் அறிவிக்க முடியும் என, த்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago