R.Maheshwary / 2022 ஜூன் 16 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இருவரை ஏமாற்றி, டீசல் என தெரிவித்து, 60 லீற்றர் தண்ணீரை 3 கேன்களில் விற்ற சம்பவம் ஒன்று பண்டாரகம பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த 60 லீற்றர் நீர், 24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்தவர் சிறிய லொறியொன்றில் இளநீர் விற்கும் ஒருவர் என்றும் மற்றையவர் சிறிய லொறியொன்றின் சாரதி என்றும் தெரியவந்துள்ளது.
பண்டாரகமயிலிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் குறித்த இருவரும் 5 நாள்களாக காத்திருந்த போது அருகில் இருந்த மற்றொரு நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
பிரிதொரு இடத்தில் திருட்டு தனமாக எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் புதிதாக அறிமுகமான நபர் குறித்த இருவரிடமும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் தெரிவித்த விடயங்களை நம்பிய இருவரும் 24,000 ரூபாய்க்கு 3 கேன்களில் டீசல் என நினைத்து தண்ணீரை கொள்வனவு செய்து, தமது வாகனங்களுக்கு ஊற்றிய போது, அது தண்ணீர் என தெரியவந்துள்ளது
7 minute ago
15 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
31 minute ago
34 minute ago