Freelancer / 2022 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்தவாரம் வியாழக்கிழமை (11) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவர் இலங்கைக்கு வந்தவுடன் எங்கு தங்கப்போகின்றார் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லையாம், அது குறித்து தனது சகோதரர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும், அவருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தித்தருமாறும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரும்பினால் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும். அதற்கான பக்க பலமாக நாம் இருப்போம் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (a)
8 minute ago
41 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
41 minute ago
43 minute ago
1 hours ago