Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 07 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
தனது முதலாவது வரவு- செலவுத் திட்டத்தை, புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்க முடியுமெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கு வழியில்லாமல், அரசாங்கம் தவிக்கிறது என்றார்.
வருமானத்தை ஈட்டிக்கொள்ள வழியில்லாது, விழி பிதுங்கிக்கொண்டிருக்கும் புதிய அரசாங்கம், சலுகைகளை வழங்குவதற்கு, போதியளவு நிதியில்லையென மக்கள் முன்னிலையில் அன்றாடம் அழுதுக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் வரவு- செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சித் தயாரென அறிவித்த பின்பும், அத்திட்டத்தை சமர்ப்பிக்காமலிருப்பது வேடிக்கையானதெனத் தெரிவித்த அவர், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத் தேர்தலில் கோரிநிற்பதும் வரிக்குறைப்பு, வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் ஆகிய தேர்தல் காலத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் நாடகமாகும் என்றார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய முதல் காலாண்டுப் பகுதியில், முன்னைய அரசாங்கம் செலுத்தாமல் இருந்த கடனில் 150 பில்லியன் டொலர்களைச் செலுத்திவிட்டே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியதெனத் தெரிவித்த அவர், ஒரேயொரு குடும்பத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே 2/3 பெரும்பான்மை அதிகாரத்தை அரசாங்கம் கோரிநின்கின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago