2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வறக்காபொல விபத்தில் 5 பேர் பலி

Kanagaraj   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறக்காபொல தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5பேர் பலியானதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குழந்தை, மூன்று பெண்கள், ஒரு ஆண் ஆகியோரே இந்த விபத்தில்  உயிரிழந்துள்ளனர்.

பிலியந்தலையிலிருந்து சோமாவதிக்கு யாத்திரீர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பஸ்ஸும், சம்மாந்துறையிலிருந்து கொழும்பை நோக்கி வந்துக்கொண்டிருந்த வானுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வானில் பயணித்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காகவே சம்மாந்துறையிலிருந்து அவர்கள் வானில், வந்துள்ளனர்.

சம்பவத்தில் பலியானவர்கள் அனைவரும், வானில் பயணித்தவர்கள் என்றும், அவர்களுடைய ஜனாஸா, வறக்காபொல, வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X