2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வலம்புரியை விற்க முயன்றவர் கைது

Editorial   / 2024 மார்ச் 18 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் ஐம்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான அரியவகை வலம்புரியை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற போது ஒருவர் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மொரந்துடுவ, தெல்துவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேருவளை பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உப பொலிஸ் பரிசோதகர் கசுன் பத்திரன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பேருவளை பிரதேசத்தில் உள்ள பிரபல தேவாலயத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்து வலம்புரியுடன் கைது செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .