Simrith / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியத் திட்டமும் வாக்களிக்கும் பொறிமுறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பொது நிர்வாக அமைச்சின் ஈடுபாட்டுடன் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், தேவையான சட்ட கட்டமைப்பை உருவாக்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் இன்று (27) அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .