Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், குறித்த படுகொலை தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் குழுவொன்று, குறித்த பிரதேசத்துக்குப் பயணித்துக்கதென்று தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (30) காலை 6 மணியளவில், மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இதுவரதும் சடலங்கள், குறித்த பககுதி பொலிஸ் காவலரணிலிருந்து மீட்கப்பட்டன. இருப்பினும், இவர்களது மரணத்துக்கான காரணம் தொடர்பில், இதுவரையில் கண்டறியப்படவில்லை.
இவ்விரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவரும், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என்றும் அவர்களில் ஒருவர், காலி - உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நிரோஷன் இந்திக்க பிரசன்ன என்றும் மற்றையவர், கல்முனை - பெரியநீலாவணை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணேஸ் தினேஸ் என்பவரென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
42 minute ago