Editorial / 2020 டிசெம்பர் 19 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு வவுனிக்குளம் வாவியில் ஜீப் விழுந்ததில் 2 வயது சிறுமி உட்பட மூவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், சிறுவன் ஒருவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கடற்படையினர் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த போது வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதனைவிட வாகனத்தின் உடைய சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும்; நடவடிக்கையில் பொலிஸார், படையினர், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
விபத்தின் போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 அகவையுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago