Editorial / 2019 ஜூலை 22 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இன்று (22) அதிகாலை வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுடன் மோதுண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மூன்றுமுறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகிலுள்ள தனியார் பஸ்கள் தரிப்பிடத்தில் பஸ்களை சுத்தம் செய்து வந்த மதுஷான் திலிந்த ஜெயவீர என்ற 25வயதுடைய கல்கமுவ பகுதியைச் சேந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் ரயில் கடவைக்கு அருகே காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்துக்கு அருகில் சில்லறைக்காசு, தீப்பெட்டி என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? போன்ற விடயங்கள் தெரியவரவில்லை என்றும் மேலதிக விசாரணகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கின்றனர்.
56 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago