Editorial / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர்கள் 50 பேரை இணைத்துக் கொண்டு, 'வாட்ஸ்அப்' குழுவொன்றை உருவாக்கி, இணையவழி மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, ஆசிரியைக்கும் ஏனைய மாணவர்களுக்கும் ஏகநேரத்தில், ஆபாசப் படங்களும் வீடியோக்களும், வெளியாரிடமிருந்து வந்து குவிவதாக, அந்த ஆசிரியை முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது: பலாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது வகுப்பிலுள்ள சுமார் 50 மாணவர்களை இணைத்துக்கொண்டு, 'வாட்ஸ்அப்' குழுவொன்றை உருவாக்கி, இணையவழி மூலம் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார்.
'வாட்ஸ்அப்' குழுவுக்கு, யாரோ ஒருவர் அல்லது குழுவொன்று, ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் அனுப்புவதாக, அந்த ஆசிரியை பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்று, குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் பிரதி அதிபர் ஒருவரும், மாணவி ஒருவரிடம் 'வாட்ஸ்அப்' ஊடாக, பாலியல் ரீதியிலான சேஷ்டை விட்டுள்ளார். இதுதொடர்பில், கேள்வியுற்ற அப்பாடசாலையின் பழைய மாணவர்கள், பிரதி அதிபருக்குப் 'புரியுமாறு' கொடுத்து, அறிவுரை வழங்கியுள்ளனர் என அறியமுடிகின்றது.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago