Editorial / 2019 ஜூலை 20 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் கடந்த 18ம் திகதி, பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மாகஸ் பீடர் ருவன், மாகம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்துன் புஷ்பகுமார ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று, மதுகம, பொலன்னறுவை பிரதேசங்களை சேர்ந்த 45 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய டிபெண்டர் வண்டி மகரகம பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டதுடன், வண்டி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவால் கொழும்பு குற்றப் பிரிவுக்கு இன்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
10 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago