Freelancer / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியைக் குறுக்கே கடந்த சிறுவன் மீது வான் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தப் பரிதாப சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை, மீராவோடையைச் சேர்ந்த 8 வயதுடைய சப்பிறா மாஹீர் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

12 minute ago
34 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
34 minute ago
50 minute ago