Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வுலகமானது அனைவரும் வாழச் சிறந்த இடமாகும். மனிதர்களுக்கு இடையில் புரிந்துணர்வு இல்லாமையால் இன்று மனிதர்கள் வாழ முடியாத இடமாக இவ்வுலகம் மாறிக்கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அவரது இந்த உரை சர்வதேச அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பீஜிங்கில் நடைபெற்ற Belt and Road மன்றத்தின் 10ஆவது ஆண்டு விழாவில் 130 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இவ்விழாவில் செந்தில் தொண்டமான் உரையாற்றுகையில்,
நண்பர்களாக இருக்க வேண்டிய நாடுகள் இன்று பகைவர்களாக மாறியுள்ளனர். இம்மாநாட்டில் இருக்கும் 130 நாடுகளும் ஒன்றிணைந்து ஆயுத கலாசாரம் முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கும் வரை இவ்வாயுத மோதல் குறித்து மௌனம் காத்த நாடுகள் அவரின் உரைக்குப் பிறகு அவருடைய கருத்தை மேற்கோள்காட்டிப் பல தலைவர்கள் உரையாற்றியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில செனட் தலைவர் ராபர்ட் மைல்ஸ் ஹெர்ட்ஸ்பெர்க் செந்தில் தொண்டமானின் பொதுநலமிக்க விவேகமான உரைக்கு நேரில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
15 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
41 minute ago
42 minute ago
53 minute ago