2025 ஜூன் 14, சனிக்கிழமை

விக்னேஸ்வரன் - சுமந்திரன் உடன்படிக்கை

Freelancer   / 2025 ஜூன் 12 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரனும் நேற்று (12)  மாலையில் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டனர்.

இந்த உடன்படிக்கை கொழும்பில் உள்ள விக்னேஸ்வரன் இல்லத்தில் கையெழுத்திடப்பட்டது.

உடன்படிக்கையின்படி நல்லூர் பிரதேச சபையில் முதல் இரண்டு வருடங்கள் தவிசாளர் பதவி தமிழ் மக்கள் கூட்டணிக்கும், அடுத்த இரண்டு வருடங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் வழங்கப்படுகின்றது.

இந்த உடன்படிக்கை நல்லூர் பிரதேச சபைக்காக மட்டுமே எனத்  தெரிவிக்கப்பட்டாலும், பிற இடங்களில் தமிழ் மக்கள் கூட்டணி இலங்கைத் தமிழரசுக் கட்சியை முழுமையாக ஆதரிக்கும் என்றும் தெரியவந்தது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .