Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 06 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதா என்பது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது. எனினும், இந்தச் செய்தி தொடர்பில், சம்பந்தப்பட்ட ஊடகத்திடம் விசேட தகவல் இருந்தால், அதனைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (05) இடம்பெற்ற, பிரதமரிடம் கேளுங்கள் நேரத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பினார்.
அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மேற்கண்டவாறு பதிலளித்தார். இடையீட்டு கேள்வியை எழுப்பிய அவர், “கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுதக்குழு திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், அந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது. இது புனையப்பட்ட செய்தியா? இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா?” என்றும் இதன்போது கேள்வி எழுப்பினார்.
அக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “உண்மையில் இந்த விவகாரம் தொடர்பில் செய்தி வெளியாகியிருந்தது, அமெரிக்கத் தூதரகமும் அதை நிராகரித்திருந்தது. எனினும், அவர்களிடம் (சம்பந்தப்பட்ட ஊடகத்திடம்) விசேட தகவல் இருக்கிறதா என்று எமக்குத் தெரியாது. ஆகவே, அவர்களிடம் விசேட தகவல் இருந்தால் அதை பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணித்துள்ளேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .