Editorial / 2026 மே 10 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
"தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள கௌரவ சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகள்.
இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான ஆழமான பிணைப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் மேலும் நெருக்கமடைந்து வரும் நிலையில், எமது எதிர்காலம் பாரிய பொருளாதார வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான வலுவான பங்காண்மையின் ஊடாக, பிராந்தியத்தின் மேலான செழுமை மற்றும் முன்னேற்றத்திற்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன். உங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
இலங்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, புதிய முதலமைச்சரின் பதவிக்காலம் சிறக்க வாழ்த்தியுள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago